சிறுவர்கள், குழந்தைகள் உயிரைக் காப்பாற்றிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர்!
திண்டுக்கல் புறநகர் EB காலனியில் மாலை சுமார் 5 மணி அளவில் சிறுவர்களும், குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்த பொழுது மிகப்பெரிய விஷப்பாம்பு ஒன்று ஒருவர் வீட்டிற்குள் நுழைந்தது, இதனை அறிந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினரை தொடர்புகொண்டு விஷயத்தை தெரிவித்தனர், தெரிவித்த சிறிதுநேரத்தில் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் அவர்களின் ஆலோசனைப்படி அங்கு விரைந்து வந்த தர்மராஜ் , ஜெயமணி , ராஜசேகர் , கார்த்திகேயன் குழுவினர் பாம்பை உயிருடன் பிடித்தனர்.பிறகு அந்த பாம்பை அடர்ந்த காட்டுப் பகுதியில் விட்டனர்.தகவல் கிடைத்ததும்விரைந்து வந்து சிறுவர்களையும்,குழந்தைகளையும் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் காப்பாற்றி, துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு
குழுவினருக்கு அப்பகுதி மக்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன! மேலும் அப்பகுதி மக்கள் அவர்களுக்கு நன்றியை தெரிவித்தனர்.