திண்டுக்கல் மாவட்டத்தில் அறநிலையத் துறையின் கீழ் உள்ள 75 கோயில்களில் பாதுகாப்பு பணிக்கு தகுதியான முன்னாள் படைவீரர்கள் , முன்னாள் ஓய்வு பெற்ற காவலர்களை அவர்களின் உடல் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து இதுவரை 40 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன .

மேலும் காலியாக உள்ள 35 பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து அதில் 17 நபர்களுக்கு பணியினை 25.11.2021 அன்று காலை 11 மணியளவில் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வழங்க உள்ளார் . மேற்படி எஞ்சியுள்ள 18 பணியிடங்களுக்கு விரைவில் நேர்காணல் நடத்தி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் பாதுகாப்பு பணிக்கு விரைவில் தகுதியானநபர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here