மாவட்ட உரிமை இயல் நீதிமன்றம், மாவட்ட கூடுதல் நீதிமன்றம், இணை மாவட்ட நீதிமன்றம், உதவி மாவட்ட நீதிமன்றம், சிறு வழக்குகள் நீதிமன்றம் (ஸ்மால் காசஸ் கோர்ட்), முதன்மை பெருநகரக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் (பர்ஸ்ட் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்டிரேட் கோர்ட்), கூடுதல் முதன்மை பெருநகரக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், அமர்வு நீதிமன்றம், கூடுதல் அமர்வு நீதிமன்றம் மற்றும் உதவி அமர்வு நீதிமன்றம்.
(குறிப்பு- முதன்மை, இரண்டாம், மூன்றாம் படிநிலைகளில் நீதிமன்றங்கள் அந்தந்த மாவட்டங்களின் வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீதிமன்றங்கள் செய்ல்படும்)
கீழ்நிலை நீதிமன்றங்கள்:
உரிமை இயல் (சமூக நலன்-சிவில்) பிரிவில் (கீழ்நிலை) நீதிபதியாக உரிமை இயல் நீதிபதியின் கணைகாணிப்பிலும், குற்றவியல் பிரிவில் கீழ் நீதிமன்ற நீதிபரிபாலணை நடுவரின் (மாஜிஸ்ட்ரேட்) கண்காணிப்பிலும் செயல்படுகின்றன
மேல் நிலை நீதிமன்றங்கள்:
உரிமை இயல் பிரிவில் (மேல் நிலை) நீதிபதியாக உரிமை இயல்(சமூக நலன்-சிவில்) நீதிபதியின் கண்காணிப்பிலும், குற்றவியல் பிரிவில் மேல் நீதிமன்ற நீதிபரிபாலணை நடுவரின் (மாஜிஸ்ட்ரேட்) கண்காணிப்பிலும் செயல்படுகின்றன.
- 1.இடை அடுக்கு- (மேல்நிலை நீதிமன்றங்கள்)
- உரிமை இயல் நீதிபதி (மேல்நிலை)-மேல்நிலை நிதமன்றங்களில் சமூக நலன் வழக்குகளை கையாள்பவர்.
- குற்றவியல் நடுவர் (மேல்நிலை )- மேல்நிலை நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளைக் கையாள்பவர்.
- 2.மூன்றாம் அடுக்கு மாவட்டக் கூடுதல் நீதிமன்றங்கள் (அடிசனல் கோர்ட்)
- முதன்மை உரிமை இயல் கூடுதல் நீதிபதி (மேல்நிலை) – சமூக நலன் வழக்குகளை கையாள்கின்றார்.
- தலைமை நீதிபரிபாலணை குற்றவியல் நடுவர் (மேல் நிலை)- தண்டணைக்குரியக் குற்றங்கள், 7 வருடம் சிறை வழங்கக்கூடிய வழக்குகளைக் கையாள்கின்றார்.