ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய நான்கு சிறுவர்களை பத்திரமாக மீட்ட தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் தேனி மாவட்ட காவல்துறையினர்

தேனி மாவட்டம்
23.11.2021

 போடி உட்கோட்டம் போடி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அணைப் பிள்ளையார் ஆற்றில்  நான்கு சிறுவர்கள் குளித்துக்கொண்டிருந்த பொழுது குரங்கணி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கொட்டகுடி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் தண்ணீர் அதிகமாக வருவதை கவனித்து ஆற்றின் நடுவில் உயரமான கல் பகுதி ஒன்றில் ஏறி அமர்ந்து  கொண்டதைத் தொடர்ந்து, தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போடி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.N.சுரேஷ் அவர்கள்,போடி நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.P.சரவணன் மற்றும் காவல் நிலைய காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர்  இணைந்து வெள்ளத்தில் நடுவில் சிக்கிய நான்கு சிறுவர்களை பத்திரமாக மீட்டனர்.


மேலும்  காவல்துறையினர் நான்கு சிறுவர்களின் பெற்றோர்களை அழைத்து தேவையின்றி பிள்ளைகளை தனியாக வெளியே அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் தக்க  அறிவுரைகளை வழங்கி சிறுவர்களை அவர்களின் பெற்றோர்கள் உடன் அனுப்பி வைத்தனர்.

வெள்ளத்தில் சிக்கிய தங்கள் பிள்ளைகளை பத்திரமாக மீட்டு கொடுத்த தேனி மாவட்ட காவல் துறையினருக்கும், தீயணைப்பு மீட்புப் படையினருக்கும் தங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை சிறுவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here